TamilsGuide

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல்

ஸ்மார்ட் அரச சேவை நிலையங்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில் Huawei Sri Lanka நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட Ideahub ஐ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு வழங்கும் செயற்பாடு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க  தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) முற்பகல் நடைபெற்றது.

இதன்படி அடையாள ரீதியாக  10 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு  Ideahub வழங்கப்பட்டது. இந்நாட்டின் அரச நிறுவனங்களுக்கு Ideahub வழங்கும் வேலைத்திட்டம் Huawei Sri Lanka நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, Huawei Sri Lanka பிரதம நிர்வேற்று அதிகாரி Zhang Jinze, பிரதான ஆணையாளர் (ஆசிரியர் கல்வி) இரோஷினி கே. பரணகம, பிரதி பணிப்பாளர் (கல்வி) என். எல். சி. பி. இந்திக ஆகியோருடன், Huawei Sri Lanka நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பீடாதிபதிகள்  உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment