TamilsGuide

மின்னேரியா ஆயுர்வேத வைத்தியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை

மின்னேரியா ஆயுர்வேத வைத்தியசாலையின்  சாளரத்தை (window)நேற்றிரவு காட்டு யானையொன்று சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது ஒரு நோயாளர் படுக்கையையும், நோயாளிகள் தங்கள் உடமைகளை வைக்கப் பயன்படுத்திய இரும்புப் பெட்டியையும் குறித்த காட்டுயானை சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தின் போது பல நோயாளிகள் சிகிச்சையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment