TamilsGuide

ஆட்குறைப்பு செய்யும் Lufthansa - ஆயிரக்கணக்காணோரை வீடுகளுக்கு அனுப்ப திட்டம்

ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.

Lufthansa நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதன் விளைாவக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் தற்போது உலகளவில் சுமார் 103,000 பேரைப் பணியமர்த்துகிறது. அதன் வலையமைப்பில் யூரோவிங்ஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், சுவிஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இத்தாலியின் புதிய முதன்மை விமான நிறுவனமாக அண்மையில் கையகப்படுத்திய ஐடிஏ ஏர்வேஸ் ஆகியவை அடங்கும்.

ஜேர்மனி இரண்டாவது வருட மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதேவெளை பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வேலையின்மை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.

அதே நேரத்தில் நாட்டின் பெரிய நிறுவனங்கள் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள், சீனாவின் போட்டி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் மெதுவான முன்னேற்றத்தை சமாளிக்க போராடி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
 

Leave a comment

Comment