TamilsGuide

அரசியல் அதிர்ச்சி - அரசாங்கத்தை கலைக்க தயாராகிய மடகஸ்கார் ஜனாதிபதி 

மடகஸ்கார் ஜனாதிபதி அண்ட்ரி ரஜோலினா தனது அரசாங்கத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

நீண்டகால நீர் மற்றும் மின்சார வெட்டுக்களுக்கு எதிராக இளைஞர் குழுக்கள் தலைமையில் பல நாட்கள் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஜோலினா அந்நாட்டு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசாங்க உறுப்பினர்கள் தங்கள் ஆணையை நிறைவேற்ற முடியாவிட்டால், நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோருகிறோம்" என்று கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment