TamilsGuide

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

டொரொண்டோவில் ஸ்கார்பரோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சாலை விபத்தில் 20 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மார்க்கம் சாலை மற்றும் கூகர் கோர்ட் சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் எஸ்.யு.வீ வாகனம் மோதியதாக டொரொண்டோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தில் கடுமையாக காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை தொடர்ந்துவருவதால் சம்பவ இடப்பகுதி சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விசாரணகைள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 

Leave a comment

Comment