கொழும்பில் இன்று (30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு -02, வோக்ஷால் வீதியில் (Vauxhall Street) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் வேனின் சாரதியும், வேனில் பயணித்த மூன்று மாணவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


