TamilsGuide

மேல் மாகாணத்தில் நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம்

தனியார் பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நாளை (ஒக். 01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

நாளை முதல், செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் தனியார் பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

பயணச்சீட்டு வழங்கத் தவறும் நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி, நாளை முதல், மேல் மாகாணத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்கள் பயணச் சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment