கனடாவின் மில்டன் பகுதியில் இடம்பெற்ற ஒற்றை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து லோவர் பேஸ் லைன் சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவப்பு நிற போர்ட் பிக்கப் வாகனமொன்று கிழக்கு திசையில் சென்று கொண்டிருந்தபோது சாலையை விட்டு விலகி கான்கிரீட் சுவரில் மோதியுள்ளது.
வாகனத்தில் பயணம் செய்த அண் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து விசாரணை பிரிவு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.


