TamilsGuide

டிரம்பின் அடுத்த அணுகுண்டு - அமெரிக்காவுக்கு வெளியில் தயாரிக்கப்படும் சினிமாவுக்கு 100% வரிவிதிப்பு

உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதுடன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன. அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதால் செய்வதால், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளில் சந்தைப்படுத்துவது கடினமாகி வருகிறது. இதனால் பரஸ்பர வரி விதிப்புதான் கிரேட் அமெரிக்காவை உருவாக்க ஒரே வழி என திட்டவட்டாக நம்புகிறார்.

இதனால் உலக நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார். சில நாடுகள் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்தன. சில நாடுகள் அடிபணியவில்லை. அடிபணியாத நாடுகளின் பொருட்கள் மீது விரி வதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். அத்துடன் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்பதால் தண்டனை வரியாக 25 சதவீதம் வரி விதித்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்படம் எந்த மற்றும் அனைத்து சினிமாக்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பர்னிச்சர்களுக்கு கணிசமான வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

டிஜிட்டல், வெப் சீரிஸ் போன்றவற்றால் அமெரிக்காவின் சினிமாத்துறை கடும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

2023 மற்றும் 2024-ல் சினிமாத்துறையினர் மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. 2023-ல் ஏறத்தாழ 5 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment