TamilsGuide

மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மதில் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்து பணியில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
 

Leave a comment

Comment