TamilsGuide

பாமர மக்களுக்கு புத்தியை கொடு இறைவா - கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து ராஜ்கிரண் வேதனை

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று(27) மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பலரும் இரங்கலையும், தத்தமது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கரூர் கொடுந்துயரம், மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

என்னதான் ஆறுதல் படுத்தப்பார்த்தாலும் மனம் தவிப்பதை, என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கே இந்த நிலையென்றால், நாற்பது உயிர்களை துள்ளத்துடிக்க சாகக்கொடுத்த, அந்தக்குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.

இறைவா அந்தக் குடும்பங்களை ஆறுதல் படுத்து... இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய்உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment