கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த கவின் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


