நயினாதீவு மண்ணின் மைந்தன் சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா பேராசிரியாக நியமனம்!
நயினை நாகபுஷணி அம்பாள் ஆலய ஆதீன குருவும் தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திர சுவாமி ஆலய குருமணியுமாகிய யாழ் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாத குருக்கள் சமஸ்கிருதத்தில் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மகிழ்வைத் தருகின்றது.
அவருடைய தந்தையார் சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் அவர்கள் சாதி மற்றும் கோத்திரம் பார்க்காமல் சாதாரண மக்களோடும் சமத்துவமாகப் பழகிய ஒருவர். கல்வித்துறையில் நமது ஊர் முன்னேற்றமடைய வேண்டும் என்று விரும்பிய பெருமகன்களில் ஒருவர. அத்தகைய ஒரு பண்பாளரின் மகன் பேராசிரியராக உயர்ந்துள்ளமை பாராட்டுக்குரியது. வளம் பெறுக! நலம் சூழ்க! வாழ்க வளமுடன்!


