TamilsGuide

எம்.ஜி.ஆர் பாடலை கிண்டல் செய்த எம்.எஸ்.வி: ஆனா அது பெரிய ஹிட்டு!

ஆமா... நீங்க என்ன செட் போட்டா எடுக்க போறீங்க? எம்.ஜி.ஆர் பாடலை கிண்டல் செய்த எம்.எஸ்.வி: ஆனா அது பெரிய ஹிட்டு!

தான் கிண்டல் செய்த எம்.ஜி.ஆர் பாடல் செம ஹிட்டானது குறித்து இசையமைப்பாளர் எம்.எஸ்.வி பேசும் த்ரோபேக் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 1996-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அன்பே வா’ இந்த படத்தில் நடிக்கும் பொழுது எம்.ஜி.ஆருக்கு 50 வயது என்று கூறப்படுகிறது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருப்பார். மேலும், நாகேஷ், மனோரமா, என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

இப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது. எம்.ஜி.ஆர், ஏ.வி.எம் நிறுவனத்திற்காக நடித்த முதல் படம் இதுதான். ‘அன்பே வா’ திரைப்படம் முழுவதும் எம்.ஜி.ஆர், சரோஜா தேவியின் ஈகோ பற்றிய கதையாக இருக்கும். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூபர் ஹிட் அடித்தது. அதிலும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடல் இன்று பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும்.

அந்த பாடலின் காட்சிகள் எப்படி அந்த காலத்தில் இப்படி ஒரு பாடலை எடுத்தார்கள் என்று பிரம்மிக்க வைக்க தோன்றும். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கவிஞர் வாலி வரியில் டி.எம். செளந்தரராஜன் மற்றும் பி.சுசீலா இருவரும் இணைந்து இந்த பாடலை பாடினார்கள். இந்த பாடலில் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது திறமை அத்தனையும் வெளிப்படுத்தியிருப்பார்.

150 இசைக்கருவிகளை வைத்து இந்த பாடல் அமைக்கப்பட்டது. அதனால் தான் என்னவோ இன்று பலரின் ஃபேவரைட் லிஸ்டில் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடல் உள்ளது. இப்படி ஒரு பாடலுக்காக தனது தனித்திறமையெல்லாம் காட்டிய எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த பாடல் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசியதாவது, “முதன்முதலில் எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாட்டை சொல்லும் பொழுது ரொம்ப பிரமாதமா சொல்லிட்டு இருந்தாங்க. ஆமா நீங்க எங்கயாவது செட்டு போட்டு எடுப்பீங்கனு தமாஷா சொல்லிட்டேன். அப்பறம் தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார் நீங்க என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க அப்படீனு.

அப்போது ஒரு இங்கிலீஸ் படம் தியேட்டர்ல ஓடிட்டு இருந்தது அது மாதிரி நான் பேண்டஸி பண்ணப் போறேன்னு சொன்னார். ஆனால் சொன்னபடி ‘ராஜாவின் பார்வை ராணி பக்கம்’ பாட்டை எடுத்தார்கள். அந்த பாட்டை பார்த்த பொழுது தேவலோகத்தில் இருக்கிற மாதிரி பண்ணாங்க” என்றார்.
 

Leave a comment

Comment