கனேடியப் பிரதமர் மார்க் கார்னி இன்று இங்கிலாந்தின் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார்.
பிரதமர் கார்னி, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, டென்மார்க், ஸ்பெயின், ஐஸ்லாந்து நாடுகளின் தலைவர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
வர்த்தகம், பரஸ்பர பாதுகாப்பு, உக்ரைன் போருக்கு எதிரான நடவடிக்கைகள், இஸ்ரேல்–ஹமாஸ் மோதல், ஆர்க்டிக் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் கூறுவதன்படி, இந்தப் பயணத்தின் நோக்கம் வர்த்தகம், வணிகம், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முகமாக நேரடி சந்திப்புகள் நடத்துவதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவை அதிகமாக நம்பிக்கொள்வதைத் தணிக்க கனடா முயற்சிக்கிறது எனவும் வலியுறுத்தப்பட்டது.
இன்று காலை, கார்னி, பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆந்தனி ஆல்பனீஸ் பங்கேற்கும் மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளார்.
எனினும், கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி கார்னியின் இந்த வெளிநாட்டு பயணங்களை விமர்சித்து வருகிறது. “நாட்டிற்கு எந்தத் தெளிவான பலனையும் கொண்டுவரவில்லை” என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


