கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் உள்ள கேட்போர் கூடத்தில் மின் இணைப்பு வயர்கள் துண்டிக்கப்பட்டு, திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கேட்போர் கூடத்திற்குள் நுழைந்து, கேட்போர் கூடத்தில் உள்ள மின்னணு சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கும் மின்சார கம்பிகளில் இருந்து செப்பு கம்பி வயர்களை திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் ஆகஸ்ட் 01 முதல் செப்டம்பர் 24 வரை காலப் பகுதியில் நடந்ததாகக் கூறி, அந்தக் கட்டிடத்தின் பொறுப்பாளர் கொழும்பு-மத்திய குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.
அதே நேரத்தில் கொழும்பு-மத்திய குற்றப் புலனாய்வு அலுவலகம் இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகிறது.


