TamilsGuide

இணையத்தில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார். கிளாமர் மட்டுமல்ல ஆக்‌ஷனிலும் தன்னால் நடித்து அசத்த முடியும் என நிரூபித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள முன்னணி நட்சத்திரங்களில் மாளவிகாவும் ஒருவர். தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள், படம் குறித்த அப்டேட்ஸ் அனைத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனன் வெளியிட்ட இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 

Leave a comment

Comment