கடந்த ஆண்டு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'டிரெயின்', 'ஏஸ்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதனை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும் பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் டீசர் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


