TamilsGuide

WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் தினசரி பயன்படுத்தப்படும் WhatsApp செயலி, தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, விரைவில் WhatsApp-இல் குறுஞ்செய்திகளை நேரடியாக மொழிபெயர்க்கும் வசதி சேர்க்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் எந்தவொரு செய்தியையும் பல்வேறு பொதுவான மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்த்து பார்க்க முடியும்.  இதன் மூலம் வெவ்வேறு மொழிகளைப் பேசும் நபர்களுக்கு இடையேயான தொடர்பாடல் மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp நிறுவனம் இந்த வசதியை சோதனைக்காக சில பயனர்களுக்கு வழங்கி வருவதாகவும், மிக விரைவில் உலகம் முழுவதும் குறித்த அம்சம் அறிமுகப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment