வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐக்கிய நாடுகள் குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவிற்கு பயணமாகிறார்.
நாளை மறுதினம் இந்த மீளாய்வுக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


