'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'பாம்' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அர்ஜுன் தாஸ் தற்போது பவன் கல்யாணின் 'ஓ.ஜி.' படத்தில் நடித்துள்ளார். பிரபு சாலமனின் 'கும்கி-2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் தற்போது பாலிவுட் சினிமாவில் களமிறங்க போகிறார். பர்ஹான் அக்தர் இயக்கத்தில் 'டான்-3' படத்தில் ரன்வீர் சிங்குக்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க போகிறாராம். விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


