TamilsGuide

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (23) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) தற்‍போதைய 7.75 என்ற சதவீதத்தில் பேண தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளை கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னரே நாணயக் கொள்கைச் சபையானது இந்த முடிவை எடுத்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாடு, வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், வரவிருக்கும் காலகட்டத்தில் பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்த இது உதவும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment