TamilsGuide

இந்திய கடற்படை பதவிநிலை பிரதானிக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு 2025 செப்டம்பர் 22, அன்று இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இராணுவத் தலைமையக வளாகத்திற்கு வந்த இந்திய கடற்படை பதவி நிலை பிரதானி உள்ளிட்ட குழுவினர், அன்புடன் வரவேற்றதுடன் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மேலும் வருகை தந்த குழுவினரை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ வரவேற்றதுடன் இந்திய கடற்படை பதவிநிலை பிரதானிக்கு தளபதி இராணுவ முதன்மை பணிநிலை அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார்.

இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு தலைவர்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment