TamilsGuide

அமெரிக்கா நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து சற்று முன்னர்  புறப்பட்டு சென்றுள்ளார்.

இதேவேளை வருகின்ற  புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவும் உள்ளார்

மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டுவேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment