TamilsGuide

வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை (22) வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் வீட்டுக்கே விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மதிலால் ஏறி மின்சாரத்தினை துண்டித்து வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் தீ பற்றியதனை கண்டு வீட்டுக்கு வெளியே வந்து உறவினர்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இனந்தெரியாத விசமிகள் வைத்த தீயில் வீட்டின் முன்பகுதி எரிந்ததுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment