TamilsGuide

உயர்வடையும் தேசிய பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) படி, நாட்டின் முதன்மை பணவீக்கம் இந்த ஆண்டில் ஒகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் 0.7% ஆக பதிவாகியுள்ளதாகக் குறிக்கிறது.

இதேவேளை, கடந்த ஜூலை 2.2% ஆக இருந்த உணவுப் பிரிவில் முதன்மை பணவீக்கம் ஒகஸ்ட் மாதத்தில் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட சமீபத்திய அறிக்கை,
ஜூலையில் -0.6% ஆக இருந்த உணவு அல்லாத பிரிவில் முதன்மை பணவீக்கம் ஒகஸ்ட் மாதத்தில் 0.4% ஆக அதிகரித்துள்ளதாக மேலும் கூறுகிறது.
 

Leave a comment

Comment