ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் வைத்திருந்த வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மித்தெனியவில் மீட்கப்பட்டுள்ளன.
மித்தேனியாவில் உள்ள ஒரு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட ஆயுதங்களில் 09 மிமீ பிஸ்டல், இரண்டு டி-56 மகசின்கள், 115 தோட்டாக்கள் மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவை அடங்கும்.
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல கடந்த வாரம் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


