இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா செடிகளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய புலனாய்வு தகவலின்படி, ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இணைந்து ஹம்பேகமுவ பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது இரண்டு கஞ்சா தோட்டங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கஞ்சாதோட்டத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் 02 இலட்சத்திற்கும் அதிக மதிப்புள்ளதாகவும், அனைத்து கஞ்சா மரங்களும் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.


