TamilsGuide

ஒரு வருடம் கடந்தும் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை – மஹிந்த

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த  போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்குச் சென்ற பின், மஹிந்த ராஜபக்‌ஷ வெளியில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment