TamilsGuide

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தீக்கிரை

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் தீவிபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக சாரதி அதனை வாகனதிருத்துமிடத்திற்கு செலுத்தி சென்றிருந்த போது நேற்று இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் தீ பரவியதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸார் ஒன்றிணைந்து அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் முச்சக்கர வண்டி முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment