TamilsGuide

தாதாசாகேப் பால்கே விருது - வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய மோகன்லால்

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருது வரும் 23ம் தேதி அன்று மோகன் லால்-க்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அசு அறிவித்துள்ளது.

அதாவது, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் மோகன் லால்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், "திறமை மற்றும் நடிப்பு பன்முகத்தன்மையின் சின்னம் மோகன்லால். பல தசாப்தங்களாக நீடித்த தனித்துவமான கலை வாழ்க்கையைக் கொண்ட அவர், மலையாள சினிமா மற்றும் நாடகத்துறையில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்,

மேலும், கேரள கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் சிறந்து விளங்கியுள்ளார். திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்களில் அவரது திறமை உண்மையான உத்வேகம் அளிக்கிறது.

தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு மோகன்லால் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவதில் நான் மிகவும் பணிவாகவும், மிகுந்த மரியாதையுடனும் இருக்கிறேன். உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவை என்னை ஊக்கத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகின்றன. சினிமா கலைக்கும், எனது பயணத்தை ஒளிரச் செய்த அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment