TamilsGuide

அந்த ரிவ்யூலாம் நம்பாதீங்க - இட்லி கடை டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.

நேற்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய தனுஷ், "9 மணிக்கு படம்னா 8 மணிக்கே சில ரிவ்யூக்கள் வரும், அதையெல்லாம் நம்பாதீங்க. 9 மணிக்கு படம் ரிலீஸ் ஆகி 12.30 மணிக்கு தான் படம் எப்படி இருக்குனே தெரியும். அதனால் சரியான ரிவ்யூக்களை பார்த்து படம் எப்படி இருக்கிறது என நீங்க முடிவு பண்ணுங்க" என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 
 

Leave a comment

Comment