தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது..
இயக்குனர் உன்னி சிவலிங்கம் பேசும்போது,
இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. மலையாளத்தில் எடுத்தாலும் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறோம். நான் மலையாளி, என்னையும் இப்படத்தையும் 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ் படமாக மலையாளத்தில் இருக்கும். தமிழ் மொழியில் மாறி வரும். அதிரடியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று விளையாட்டை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன்.
கச்சிசேரா ஆல்பத்தை பார்த்து தான் சாய்யை முடிவு செய்தேன். இன்று வரை என்னுடன் இருந்து பக்கபலமாக சாய் இருக்கிறார். ஷேன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.
நடிகர் சாந்தனு பேசும்போது,
பல்டி 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும்.ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.
நடிகர் ஷேன் நிகம் பேசும்போது,
பல்டி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. 4 பசங்க, அவர்களுடைய கபடி குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை. பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. செல்வராகவன் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன் அவருடைய புதுப்பேட்டை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.
சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ப்ரீதிக்கு நன்றி மற்றும் இப்படக் குழு அனைவருக்கும் நன்றி.
இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள் என்றார்.


