TamilsGuide

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முறைப்பாடுகளை விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

நேற்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவில், பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட 16 பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

1985ஆம் ஆண்டு “வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை அதிகார சபை” என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களின் முறைப்பாடுகளுக்கு பயனுள்ள மற்றும் உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுப்பது, முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது மற்றும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்தப் பிரிவு நிறுவப்பட்டதாக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தப் பிரிவு விரைவாக நிறுவப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment

Comment