TamilsGuide

கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் 200 கிராம் போதைப் பொருள் மீட்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கைவிடப்பட்ட பையில் இருந்து 200 கிராம் ‘ஜஸ்’ வகை போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (19) மாலை 4.10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான பையை கண்டுபிடித்து, அதனை புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர்.

பையைத் திறந்து பரிசோதித்தபோது, 252 சிறிய பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த  போதைப் பொருளை கைப்பற்றிய பொலிஸார்  நீதிமன்றத்தில் அதனை  ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment