TamilsGuide

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு- 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்ய சென்றனர்.

அப்போது போலீசார் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a comment

Comment