TamilsGuide

கதாநாயகன் மாற்றம் - மார்கோ 2 படக்குழு வெளியிட்ட அப்டேட்

மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது . இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

படத்தின் பின்னணி இசை ரவி பஸ்ருர் மேற்கொண்டார். இப்படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வசூலில் 100 கோடியை கடந்தது. இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து மார்கோ படத்தின் அடுத்த பாகம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகம் 2-க்கு லார்ட் மார்கோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் நாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கவில்லை. இப்படத்தை ஹனீஃப் அதேனி இயக்குகிறார். திரைப்படத்தை க்யூப்ஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகனாக யாஷ் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
 

Leave a comment

Comment