TamilsGuide

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) அன்றாடம் சுமார் 05 நபர்கள் இறக்கும் அபாயத்தில் உள்ளதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு (NRDPRU) தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் நாட்டில் 1,600 க்கும் மேற்பட்டோர் நாள்பட்ட சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் உயிரிழந்துள்ளதாகவும் பிரிவின் பணிப்பாளர் ஆலோசகர் சமூக மருத்துவர் சிந்தா குணரத்ன தெரிவித்தார்.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிறுநீரக நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் பிற்காலத்தில் தோன்றுவதால், தொற்றா நோய்கள் (NCDs) உள்ள நபர்கள் வழக்கமான சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment