TamilsGuide

கல்கிசை கடற்கரையில் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு

கல்கிசை கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (17) நடந்தது.

பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், பலத்த நீரோட்டத்தில் சிக்கிய நபர்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு பின்னர் முதலுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 16 வயதுடையவெல்லம்பிட்டி, கட்டுகுருந்த மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment