TamilsGuide

இங்கிலாந்தில் டிரம்ப் மன்னருடன் சந்திப்பு - வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா, பிரிட்டனுக்கு இரண்டாவது அரசு முறைப் பயணமாக வந்துள்ளனர்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, விண்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோரை சந்தித்து விருந்தில் கலந்து கொண்டனர்.

பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.

டிரம்ப் விண்ட்சர் கோட்டையில் இருக்கும் அதே நேரத்தில், மத்திய லண்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் டிரம்ப் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Leave a comment

Comment