TamilsGuide

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் என் பாட்டன் சாமி பாடல் வெளியானது

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற 1-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் 'என் பாட்டன் சாமி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
 

Leave a comment

Comment