இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சித்தார்த், இப்போது சர்வதேச மேடையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறார். ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு அடிப்படையாக உருவாகும் நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் சீரிஸ் "Unaccustomed Earth"-இல் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த சீரிஸில் சித்தார்த் அமித் முகர்ஜி என்ற கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார்.
இதனுடன், நடிகை ஃப்ரீடா பின்டோ பாருல் சௌதரி திருமணமான பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார். அவளது முன்னாள் காதல் மீண்டும் வாழ்வில் வரும்போது, அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்கிறது. இவர்களது காதல் இந்திய அமெரிக்க சமூகத்தை அதிரச் செய்கிறது. இத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
தயாரிப்பு & குழு
எபிசோடுகள்: 8 (டிராமா தொடர்)
தயாரிப்பு நிறுவனம்: ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ், வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன்
ஷோ ரன்னர்: மதுரி சேகர்
இயக்கம்: முதல் இரண்டு எபிசோடுகளை The Lunchbox புகழ் ரிதேஷ் பட்ரா இயக்கியுள்ளார்
சித்தார்தின் சமீபத்திய "சித்தா" மற்றும் "3BHK" போன்ற படங்கள் உணர்ச்சி வசப்பட்ட கதை சொல்லலுக்காக பாராட்டைப் பெற்றன. தற்போது அவர் உலகளாவிய ரசிகர்களையும் கவரப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.


