இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கையை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தார்.
இதேவேளை கடந்த 13ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மற்றும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, கொழும்பில் உள்ள சீனத் தூதுவர், விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
பின்னர் சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மறுநாள் சந்தித்தார்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபோது, சீனத் தூதுவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசியில் அழைத்து கைது குறித்து விசாரித்ததாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


