TamilsGuide

மறுமலர்ச்சி நகரம்- நுவரெலியாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுப்பு

மறுமலர்ச்சி நகரம் எனும் தொணிப் பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் 2025 நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (16) நுவரெலியா பிரதேச சபையின் கீழ் நானுஓயா நகரில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பொதுமக்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகமொன்றினை நுவரெலியா பிரதேச சபையினர் ஏற்பாடு செய்து அரங்கேற்றி இருந்தனர்.

அதே நேரம் நுவரெலியா பிரதேச சபை திண்ம கழிவுகள் சேகரிக்கும் கால அட்டவணையையும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமாக கையளித்தனர்.

அத்தோடு மறுமலர்ச்சி நகரம் எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜா மரக்கன்றுகளை நாட்டினார்.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment