கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான சீன நாட்டவர் நேற்று (15) இரவு 7:00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணைக்காக, சீன நாட்டவரும் ட்ரோனும் ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸாரால் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


