TamilsGuide

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த சோதனையின் போது, ​​ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாயவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்காவின் சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

இந்தோனேசியாவில் அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும்.

முன்னதாக, நுவரெலியா, மித்தேனியா, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தான ஆகிய இடங்களில் இதுபோன்ற ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment