TamilsGuide

மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999ஆம் ஆண்டு விமானப்படை குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை நினைவுகூரும் 26வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் 24 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுடரேற்றி மலர்தூவி, கண்ணீருடன் அவர்களை நினைவுகூர்ந்தனர்.

இந் நிகழ்வை தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அமைப்பின் தலைவர் த. லோகேஸ்வரன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஞா. யூட் பிரசாத், தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச. சத்தியரூபன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment