இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியாவில் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் வெளி படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட பணிகள் மும்பையில் படமாக்கப்பட இருக்கிறது.
இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹைவான் திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரிக்கின்றனர்.


