TamilsGuide

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுதொடர்பாக இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது

இதேவேளை உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜிதஹேரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா பயணம் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சு அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது

அனைத்து இலங்கையர்களின் பொருளாதார, சமூக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா விஜயத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அவற்றை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நேரம் மற்றும் அவகாசம் தேவை என்பதை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயரர்ஸ்தானிகர், வோல்கர் டர்க் உடனான சந்திப்பின் போது அமைச்சர் குறித்த விடயங்களை வலியுறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவேளை மனித உரிமைகள் பேரவையின் தலைவரான, சுவிட்சர்லாந்தின் ஜூர்க் லோபரையும் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் உயர் மட்ட அரசியல் ஈடுபாட்டின் அவர் வரவேற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை இலங்கைக்கு ஆதரவாகப் உரையாற்றியிருந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத், நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment