TamilsGuide

சீகிரிய கண்ணாடி சுவற்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

சிகிரியா பாறைக் கோட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதி சேதப்படுத்தியதாகக் கூறி 21 வயது பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் தொல்பொருள் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்து சிகிரியா காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், நண்பர்கள் குழுவுடன் உலக பாரம்பரிய தளத்தைப் பார்வையிட்டிருந்தார்.

இந்த இளம் பெண் இன்று தம்புள்ளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டில், கண்ணாடிச் சுவருக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 23 வயது பெண்ணுக்கு தம்புள்ளை நீதிவான் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment